
இனிமேல் நீ
பூவெல்லாம் சூடாதே,
எது பூ
எது நீ
என்று குழம்புகிறது என் மனது...
உன்னை காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து
எனக்கு மட்டுமல்ல
என் கடிகாரத்திற்கும்
ஏதோ ஆகிவிட்டது,
உனக்காக காத்திருக்கும்போது
மெதுவாகவும்
நீ வந்த பிறகு
வேகமாகவும் ஓடுகிறது...
இந்த
நான்கெழுத்து, ஐந்தெழுத்து
பெயர்களெல்லாம் உனக்கு வேண்டாம்,
முப்பதெழுத்து, நாற்பதெழுத்து,
பெயர்களாக சூட்டிக்கொள்,
அப்போது தான் அதிக நேரம்
உச்சரிக்க முடியும்
உன் பெயரை...
No comments:
Post a Comment