Saturday, October 29, 2011

கனவுகளிலும் கவிதைகளிலும்

எல்லோரும் தூங்கியபின்
கனவு தானே கான்பார்கள்,
நான் மட்டும் தான்
கவிதை கான்கிறேன்,
கனவில் வருவது நீயாயிற்றே.....


கனவுகளிலும்
கவிதைகளிலும்
உன்னை காதலித்து விட்டு,
நேரில் காதலிக்க
தினறிக்கொண்டு இருக்கிறேன்....














இப்பொழுதெல்லாம் 
என் தாய் மொழியைவிட
உன் கண்கள் பேசும் மொழியைத்தான்
அதிகம் பயன்படுத்துகிறேன்,
என் கவிதைகளில்.....




நீ
நேரில் பேசும்போது
ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும்
வெட்கம்
கண்களால் பேசும்போது மட்டும்
எங்கே செல்கிறது?.....

Saturday, October 8, 2011

கண்ணா பின்னா தத்துவங்கள்

1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"
2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்துபேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும்.அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.
3. டீ மாஸ்டர் டீ போடுரார்பரோட்டா மாஸ்டர் பரோட்டாபோடுரார்மேக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்ஹெட்மாஸ்டரால மண்டைய போட முடியுமா?
4. புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா
5. ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்ஆனால்அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது
6. 1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....ஆனா.....ஆனா.......ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....
7. காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?ஏனென்றால் அதுவே புல்தான் - புல்

8.நைட்ல கொசு கடிச்சாகுட் நைட் வைக்கலாம்...ஆனா, பகல்ல கடிச்சாகுட் மார்னிங் வைக்கமுடியுமா..???
9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
10. நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?

Monday, October 3, 2011

முப்பதெழுத்து பெயர்


இனிமேல் நீ
பூவெல்லாம் சூடாதே,
எது பூ
எது நீ
என்று குழம்புகிறது என் மனது...


உன்னை காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து
எனக்கு மட்டுமல்ல
என் கடிகாரத்திற்கும்
ஏதோ ஆகிவிட்டது,
உனக்காக காத்திருக்கும்போது
மெதுவாகவும்
நீ வந்த பிறகு
வேகமாகவும் ஓடுகிறது...


இந்த

நான்கெழுத்து, ஐந்தெழுத்து

பெயர்களெல்லாம்
உனக்கு வேண்டாம்,

முப்பதெழுத்து, நாற்பதெழுத்து,

பெயர்களாக
சூட்டிக்கொள்
,
அப்போது தான் அதிக நேரம்

உச்சரிக்க முடியும்

உன் பெயரை...

சொல்லாத காதல்...



இபோதெல்லாம் கல்லூரிக்கு வருவதே படிப்பதற்காக என்பது போய் அவளை பார்பதற்க்காத்தான் என்றாகி விட்டது. தினமும் நான் ஏறும் பேருந்து நிறுத்திலிருந்து நான்கு நிருத்தங்களுக்கு அடுத்து தான் அவள் ஏறுவாள். நான் முதலிலேயே ஏறிவிடுவேன் என்ற போதும் அவள் ஏறிய பிற்கே என் மனம் பேருந்தில் ஏறும். அவள் மட்டுமல்ல, அவளுடன் வரும் அனைவருமே அழகாக தெரிகின்றனர். நம்க்கு நன்கு பிடித்த பாடலை லேசாக தூரத்தில் கேட்டாள் நாமும் கூடவே உச்சரிக்க ஆரம்பித்து விடுவோம், அது போல் தான் அழகான் பொருள்களை எங்காவது பார்த்தால் உன் பெயரை தானாகவே உச்சரிக்கிறது என் மனது. எனக்கொரு ஆசை அவள் பேருந்தில் ஏறியதும் வழக்கமாக நிற்கும் இடத்தில், ’தேவதைகள் நிற்கும் பகுதி’ என அறிவிப்பு பலகை மாட்ட வேண்டும். என்ன செய்ய உன் அழகை இப்படி விலகி இருந்தே விவரிக்க வேண்டியுள்ளது. எப்படியும் அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று தீர்மானதோடு தான் ஏறியிருக்கிறேன். இதோ என் முன்னால் தான் நிற்கிறாள்.
ஆணால் சொல்ல முயற்ச்சித்தும் வார்த்தைகள் மட்டும் வர மாட்டேன் என்கிறது, அவளுக்காக நேற்று இரவு எழுதிய அனைத்து கவிதைகளும் காலவதியாகின்றன அவள் அழகின் முன்னால். இருந்தும் ஒரு தயக்கம், பட்டாசு வெடிக்கும் சிறுவர்களை பார்த்திருக்கிறீர்களா? வெடியின் திரியில் தீயை வைக்க அருகில் செல்வார்கள், ஆணால் வைக்க மாட்டார்கள், வைத்துவிட்டதாக நினைத்து ஓடி விடுவார்கள், இப்படியே தான் செய்வார்கள். ஆணால் கடைசி வரை வைக்க மாட்டார்கள். அது போல் தான் நானும். எப்படி சொல்லவேன், ஒருவேளை அவள் மறித்து விட்டாள் என்ன செய்ய? எங்கோ படித்த கவிதை:

காதலிக்காதவர்களே காதலில் தோற்கிறார்கள்...

அப்படி என்றால் நிச்சயம் என் காதல் தோற்காது. ஏனென்றால் தபு சங்கர் சொன்னது போல நான் அவளை என் இதையத்தில் அல்ல, என் இதயமாக வைத்துள்ளேன். இதோ என் கல்லூரியும் வந்து விட்டது. இன்றும் என் காதல் சொல்லாத காதலாகவே உள்ளது..

Saturday, October 1, 2011

தேவதைகள் மனிதர்களை காதலிப்பார்களா?

அன்று சனிக்கிழமை, காலை கல்லூரிக்கு செல்ல பேருந்தில் ஏறும்போதுதான் அவளை முதல் முறையாக பார்த்தேன். அவளை பார்த்தவுடன் காதல் வருகிறதோ இல்லையோ, கவிதை வரும். நீங்கள் கலிநடனம் பார்த்திருக்கலாம், கவிதை நடனம் அவளிடம் மட்டும் தான் பார்க்க முடியும். என் வாழ்வில் நான் பார்த்த மொத்த அழகும் சேர்ந்து இருப்பது போல் இருந்தாள். என்றுமே பேருந்து படியில் பயணிக்காத நான் அன்று அவளை கான்பதற்காகவே படியில் தொங்கிக்கொண்டு வந்தேன். அங்கிருந்து தான் அவளை முழுமையாக பார்க்க முடியும், இல்லை, இல்லை, முறையாக பார்க்க முடியும், ஒளிந்து கொண்டே. இருந்தும் ஒரு முறை நான் அவளை பார்ப்பதை அவள் கவனித்து விட்டாள், உடனே ஒரு வெட்கத்தை மட்டுமே சிந்தி குனிந்து கொண்டது தான் தாமதம், அவள் சிந்திய வெட்கம் ஓடி வந்து என்மேல் ஏறிக்கொண்டது. நானும் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டேன். அந்த பயணம் எவ்வளவு நேரம் தொடர்ந்தது என்று தெரியாது, எங்கே தெரிவது, எனக்கு அவள் மட்டும் தானே தெரிகிறாள். நான் இரங்க வேண்டிய நிறுத்தமே என் நன்பன் சொல்லித்தான் தெரிந்தது. அந்த பயணம் இன்று வரை தொடர்கிறது, அவள் நினைவுகளோடு. ஆணால் ஒன்று அந்த பயனத்தில் இருந்து தான் என் காதல் பயணம் தொடங்கியது. இதை நான் எழுதும் நாள் வரை அவளிடம் என் காதலை சொல்லவில்லை. எப்போது சொல்வேன் என்று தெரியாது, ஏன் பெயர் கூட இன்று வரை தெரியவில்லை. அவள் என் காதலை ஏற்றுக்கொள்வாளா என்றும் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள் தேவதைகள் மனிதர்களை காதலிப்பார்களா?