Thursday, September 29, 2011

அவளும் என் கவிதைகளும்...

நான் எழுதும்
சுமாரான கவிதைகள் கூட
அற்புதமான கவிதை ஆகி விடுகிறது,
நீ படிக்கும்போது...

உன் தோழிகள் அனைவரும்
பூ வைத்துள்ள போதும்,
நீ சூடிய பூ மட்டும்
பூவின் மீது பூத்த
பூ மாதிரி தெரிகிறது...

எவ்வளவு முயற்ச்சித்தும்
எழுத முடியவில்லை,,
உன் கண்களுக்கு
ஈடான கவிதையை....

என்ன இது,
உன் வெட்கத்திலிருந்து பிறக்கும்
கவிதைகளுக்கு
உன்னை போல
வெட்கப்பட தெரிவதில்லையே...

உன் காதலுக்கு
என் கவிதைகள் தேவைபடுகிற்தோ
இல்லையோ
என் கவிதைகளுக்கு
உன் காதல் தேவை...

எப்படியாவது
உன் கைகுட்டையை
திருடிவிட வேண்டும்,
அதில் தானே துடைத்து வைதுள்ளாய்
உன் முகத்தில் வழியும்
கவிதைகளை...

உன்னிடத்தில் என்
நண்பர்கள் பேசும்போதெல்லாம்
ஆச்சர்யமாக உள்ளது,
இப்படி கவிதை மழையில்
நனைந்தும்
ஒன்றும் ஆகாமல் இருக்கிறார்களே...

இப்படிக்கு,
முழு நேரக் காதலன்...

Monday, September 26, 2011

பூக்களின் தற்கொலை

உன் கூந்தல் வாசனை
நீ சூடிய பூவின் வாசனையை
வீழ்த்தி விட்டதோ என்னவோ?
ஒவ்வொரு பூவாக உதிர்கிறதே...

கொஞ்சம் இடைவெளி விட்டு
வெட்கப்படேன்,
இப்படி தொடர்ந்து வெட்கப்பட்டால்
எப்படி பொறுக்குவது,,
உன் வெட்கத்திலிருந்து உதிரும்
கவிதைகளை...

இப்படிக்கு
முழு நேரக் காதலன்...

காதலுக்கென்று அகராதி ...

உன்னை காதலிக்க வேண்டும்
என்பதற்காக கவிதை எழுதுவதில்லை
உன் வெட்கத்தை கான்பதற்காகவே
எழுதுகிறேன்,
ஆணால் என் எல்லா கவிதைகளும்
உன் வெட்கதிலிருந்தே பிறக்கின்றன...

காதலுக்கென்று அகராதி
உண்டா என்ன?
அங்காவது தேடி பார்கிறேன்
என் காதலியின் முகவரியை...

இதுவரை
என் கவிதைகள் அனைத்தும்
என் காதலை பற்றியே உள்ளன,
என் காதலியை பற்றி இல்லை,
தயவு செய்து வாங்களேன்,
உஙகளை பற்றி எழுதுகிறேன்...

நான் எழுதும்
கவிதைகளை படிக்கும்போதெல்லாம்
வெட்கப்படுகிறாயே,
நீ வெட்கப்படுவதை கான்பதற்காகவே
முழு நேரக் கவிஞனாகலாம்...

உன் இமைகளென்ன
உன் கண்ணென்ற ஒவியத்தை
வரைந்த தூரிகைகளா?...

என்றும் காணாத அதிசயத்தை
நேற்று நீ கறுப்பு நிற உடையில்
வந்த போது கண்டேன்,,
ஒரு தேவதை
கருப்பு நிற உடையனிந்து வருகிறதே...

நான் வள்ர்க்கும் செடியில் உள்ள ரோஜா
என்னிடம் கேட்டது
’’எனக்கு ஒரு உடை வஙக வேண்டும்
வாங்கி தருகிறாயா’ என்று
தயவு செய்து சொல்
நீ எங்கு உடை வாங்குகிறாய்?...

Thursday, September 22, 2011

காதலன்...




இது நாள் வரை காதலை
மட்டுமே காதலித்துக்கொண்டிருக்கிறேன்


உடனடியாக ஒரு காதலி வேண்டும்,,


எனக்கல்ல,


என் கவிதைகளுக்கு,


இந்த நொடி வரை


அனாதையாக உள்ளன...

முழு நேர காதலன்

என் ஆயுள் முழுக்க
கவிஞனாகவே உள்ளேன்
என் ஆயுள் முடிவதற்குள்
தயவு செய்து என்னை
காதலனாக்கி விடு....