உன்னை காதலிக்க வேண்டும்
என்பதற்காக கவிதை எழுதுவதில்லை
உன் வெட்கத்தை கான்பதற்காகவே
எழுதுகிறேன்,
ஆணால் என் எல்லா கவிதைகளும்
உன் வெட்கதிலிருந்தே பிறக்கின்றன...
காதலுக்கென்று அகராதி
உண்டா என்ன?
அங்காவது தேடி பார்கிறேன்
என் காதலியின் முகவரியை...
இதுவரை
என் கவிதைகள் அனைத்தும்
என் காதலை பற்றியே உள்ளன,
என் காதலியை பற்றி இல்லை,
தயவு செய்து வாங்களேன்,
உஙகளை பற்றி எழுதுகிறேன்...
நான் எழுதும்
கவிதைகளை படிக்கும்போதெல்லாம்
வெட்கப்படுகிறாயே,
நீ வெட்கப்படுவதை கான்பதற்காகவே
முழு நேரக் கவிஞனாகலாம்...
உன் இமைகளென்ன
உன் கண்ணென்ற ஒவியத்தை
வரைந்த தூரிகைகளா?...
என்றும் காணாத அதிசயத்தை
நேற்று நீ கறுப்பு நிற உடையில்
வந்த போது கண்டேன்,,
ஒரு தேவதை
கருப்பு நிற உடையனிந்து வருகிறதே...
நான் வள்ர்க்கும் செடியில் உள்ள ரோஜா
என்னிடம் கேட்டது
’’எனக்கு ஒரு உடை வஙக வேண்டும்
வாங்கி தருகிறாயா’ என்று
தயவு செய்து சொல்
நீ எங்கு உடை வாங்குகிறாய்?...
No comments:
Post a Comment