Thursday, November 3, 2011

அவள் கூந்தலும் என் கவிதைகளும்

எனக்கு மிக பிடித்த 
கவிதை எது என்று கேட்டால்
யோசிக்காமல் சொல்வேன்
எனது டைரியின் முதல் பக்கத்தில்
எழுதியுள்ள உனது பெயரை....


பூவோடு சேர்ந்து
நாரும்
மணக்கும் என்பார்களே,
அதே கதி தான்
உன்னை பற்றி எழுதிய
என் கவிதைகளுக்கும்....


உன் கூந்தலை
இறுகப்பறியிருக்கும்
பூக்களை போல
உன் பிம்பத்தை 
இறுகப்பறியிருக்கின்றன
என் கண்கள்....


நீ ஒன்றும் செய்ய
வேண்டாம்
என்னை காதலிக்க மட்டும் செய்
உன்
கண்களில் இருந்து வரும்
க்ண்ணீர் துளிகளை கூட
கவிதைகளாக்கி தருகிறேன்....


உனக்காக நான்
எழுதும் கவிதைகளை பார்த்து
என் நன்பர்களுக்காக
எழுதும் கவிதைகள் பொறாமைப்படுகின்றன
அவை போல் இவை
இருப்பதில்லையாம்....


எப்படி முடிகிறது
உன்னால்?
உன் கொழுசொலியில்
இருந்து கொட்டும் கவிதைகளை
மிதித்து நடக்க....









காற்றில் பறக்கும்
உன் துப்பட்டாவை
காணும்போதெல்லாம்
தேசியக்கொடியை பார்த்தது போல
விரைப்பாக நின்று
அடம் பிடிக்கிறது
என் மனது....

3 comments:

  1. அருமை நன்பா....

    ReplyDelete
  2. சூப்பர் சார்,,

    ReplyDelete
  3. கொலுசில் வரிகள் கொட்டுமா?

    அருமை சகோதரா...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்கள்

    ReplyDelete